/* */

விஷத்தன்மை கொண்ட முள் காலில் குத்தியதால் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் ஷூ அணியாமல் மலைக்கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது காலில் கருவேலமுள் குத்தி காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

விஷத்தன்மை கொண்ட முள் காலில் குத்தியதால் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர்
X


காலில் கருவேல முள் குத்தியதால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று மாலை பெரியகுளம் சென்றார். செல்லும் வழியில் தேனி- பெரியகுளம் ரோடு பைபாஸ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் ஹெலிபேட் தளத்தை ஆய்வு செய்தார். சுற்றுலா பயன்பாடு மற்றும் அவசர ஆம்புலன்ஸ் ஹெலிபேட் சிகிச்சை போன்ற தேவைகளுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், பெரியகுளம் சென்ற அவர் அங்கு வனப்பகுதியில் மக்கள் வசிக்கும் செல்லான்காலனிக்கு சென்றார். அங்கு 21 குடும்பத்தை சேர்ந்த 80 பேர் மண் குடிசைகளில் வசிக்கின்றனர். இந்த குடிசைப்பகுதிகளை பார்வையிட ஷூவை கழட்டி வைத்து விட்டு சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு காலனி பகுதிக்குள் சென்றார்.

அப்போது வழியில் கிடந்த கருவேல முள் ஆட்சியர் காலில் குத்தி ரத்தம் கசிந்தது. வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்று குடிசைப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, தங்களுக்கு பட்டாவுடன் கூடிய வீட்து மனை வேண்டுமெனவும், அதில் வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மலைவாழ் மக்களுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகளை இவர்களுக்கு செய்து கொடுத்து, அவர்கள் கேட்டது போல், பட்டா வழங்கி வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். பின்னர், பெரியகுளம் வந்த அவர், அங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவுமனைக்கு சென்று கருவேலமுள் குத்திய காயத்திற்கு மருந்து எடுத்தபின் தடுப்பு (டி.டி) ஊசி போட்டுக்கொண்டார்.

Updated On: 24 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’