/* */

தஞ்சை மாநகராட்சியின் சார்பில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 13 இடங்களில் 1,900 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியின் சார்பில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதன்படி, இன்று 13 மையங்களில் 1900 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர் நகரில் 200 நபர்களுக்கும், பழைய வீட்டு வசதி வாரியத்தில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணா பள்ளியில் 100 நபர்களுக்கும், டிஇஎல்சி பள்ளியில் 150 நபர்களுக்கும், சி.ஆர்.சி பேருந்து பணிமனையில் 150 நபர்களுக்கும் என மொத்தம் ஐந்து மையங்களில் 600 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

இதேபோல் கரந்தை மாநகராட்சி பள்ளியில் 200 நபர்கள், வண்டிக்கார தெரு மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கும், தென்கீழ் அலங்கம் நகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கும், அண்ணாநகர் மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கும், முனிசிபல் மாநகராட்சி பள்ளியில் 150 நபர்களுக்கும், வார்டு 31 திருமகள் பள்ளியில் 150 நபர்களுக்கும், சௌராஷ்டிரா தெருவில் 150 நபர்களுக்கும் செக்கடி பகுதியில் 150 நபர்களுக்கும் என மொத்தம் 8 மையங்களில் 1400 தடுப்பூசி செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது