/* */

குடியரசு தின விழா: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்

கொரோனா பரவல் காரணமாக அரசு உத்தரவுப்படி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை

HIGHLIGHTS

குடியரசு தின விழா: தஞ்சை மாவட்ட  ஆட்சியர்  தேசிய கொடியேற்றினார்
X

தஞ்சாவூரில் நடைபெற்ற  குடியரசுதின விழாவில்  காவலர்களின் அணிவகுப்பு

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் மிகவும் எளிய முறையில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றினார்.

நாட்டின் 73-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 54 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கணேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். மேலும் பாபநாசம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய மூதாட்டி சரோஜா( 62 )மற்றும் முதியவர் கண்ணையன் ஆகியோருக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருதை வழங்கி கலெக்டர் பாராட்டினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கொரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் திருவையாறு துரை கோவிந்தராஜன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை