/* */

காவல்துறை அனுமதியின்றி கபடி போட்டி: 8 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசை கண்டதும் கபடி வீரர்கள் அனைவரும் தப்பிஓடியதால் அங்கிருந்த மைக்செட், ஜெனரேட்டர் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

காவல்துறை அனுமதியின்றி கபடி போட்டி: 8 பேர் மீது வழக்குப்பதிவு
X

தஞ்சை அருகே அரசு அனுமதி இன்றி கபடி போட்டி நடத்திய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு அருகில், அரசு விதிமுறை மற்றும் கொரோனா நெறிமுறைகளை மீறியும், காவல்துறை அனுமதி இன்றியும் கபடி போட்டி நடத்தப்பட்டது. தகவல் கிடைத்தும் தாலுகா போலீசார் . உடனடியாக போட்டி நடந்த இடத்திற்கு சென்றனர். போலீசைக் கண்டதும், கபடி நடத்தும் குழுவினர் அனைவரும் தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் அங்கிருந்த மைக் செட், ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் கோபிநாத், ரமேஷ், வீரமணி, மணிகண்டன், மகேஷ், அருண்குமார், மணிகண்டன், ஆதி, ஆகிய 8 பேர் மீதும் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 30 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!