/* */

விவசாய பணிக்கு டெபுடேசனில் ஆள் அனுப்புங்க... கலெக்டரிடமே விவசாயி மனு

விவசாய பணிக்கு டெபுடேசனில்ஆள் அனுப்புங்க என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் விவசாயி மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

விவசாய பணிக்கு டெபுடேசனில் ஆள் அனுப்புங்க... கலெக்டரிடமே விவசாயி மனு
X
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்.

விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் டெபுடேசனில் விவசாய பணிக்கு அனுப்பும் படியும் அவர்களுக்கு பஞ்சப்படி ,பயணப்படி மதிய உணவுடன் உரிய கூலியும் அளிக்க தயார் என ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி மனு அளித்தார்.

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெற்கட்டும் சேவல் ஊராட்சி பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் என்பவரும் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவை படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அவரது அந்த மனுவில், தனது ஊரில் நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், 100 நாள் வேலை திட்டம் பணிகள் நடைபெறுவதால் தனக்கு களை எடுப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே, ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருந்தால் அவர்களைக் களையெடுக்கும் பணிக்கு டெபுடேஷனில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு ஆகியவற்றுடன் உரிய கூலியையும் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் மகேஸ்வரன் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை மிகக் கடுமையாக ஏற்பட்டுள்ள நிலையில் மகேஸ்வரனின் இந்த மனு ஆட்சியர் அலுவலக வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விவசாய பணியை குறைத்து மதிப்பிட முடியாது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கூட விவசாய பணிக்கு பயன்படுத்தலாம் என்ற ஒரு வழிகாட்டுதலையும் விவசாயி அளித்த இந்த மனு மறைமுகமாக சுட்டிகாட்டுகிறது.

Updated On: 3 May 2023 11:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...