/* */

தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மடத்துப்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
X

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்டது மடத்துப்பட்டி கிராமம். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள கலிங்கன்குளத்தில் இன்னும் 20 தினங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், சொக்கம்பட்டி கிராமம் புன்னையாபுரம் முந்தல் மலையில் பெய்கின்ற அருவி நீரை, தங்கள் குளத்திற்கு திருப்பி விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கடையநல்லுர் வட்டாட்சியர் தலைமையில், திருவேட்டநல்லூர் மற்றும் புன்னையாபுரம் பகுதி மக்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எடுக்கப்படவில்லை. முந்தல் மலையில் தற்போது அதிக அளவு நீர் வரத்து உள்ளது. இந்த நீரானது புன்னையாபுரம் கிராமத்தில் உள்ள மாடன் சேர்வை குளத்திற்கு சென்று அங்கிருந்து தாதம்பட்டி மற்றும் சூர்யநாராயனபேரி குளங்கள் வழியாக கடலில் கலக்கிறது.

வீணாக கடலில் கலக்கிற தண்ணீரை மடத்துப்பட்டி கிராம விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தங்கள் பகுதி கலிங்கன்குளத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரி, அப்பகுதி விவசாயிகள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வழங்க திரண்டு வந்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 8 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது