/* */

சொத்து வரி அதிகரிப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: துரை வைகோ வேண்டுகோள்

தமிழக அரசு சொத்து வரி அதிகரிப்பு விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

HIGHLIGHTS

சொத்து வரி அதிகரிப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: துரை வைகோ வேண்டுகோள்
X

மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் மதிமுகவின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக கட்சியை சேர்ந்த ஒன்றிய நகர கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் இடையே உரை நிகழ்த்தி கட்சி படிவங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் இருந்து வீட்டு வாடகை கூட தர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூடிய சூழ்நிலை கூட உருவாக்கியது. தற்போது இந்த சொத்து வரி உயர்வு அதிகரிப்பை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் சொத்து வரி அதிகரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மதிமுக சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.

பெட்ரோல் டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு போன்றவைகள் அடித்தட்டு மக்களை மட்டுமே பாதிக்கும் எனவும் சொத்து வரி உயர்வுக்கு போராட்டத்தை அறிவித்து உள்ள கட்சிகள் பெட்ரோல் டீசல் விலை ஆகியவற்றிற்கு ஏன் போராடவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்

Updated On: 4 April 2022 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க