/* */

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும்அதிகரிப்பு: தமிழக - கேரள எல்லையில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு:  தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
X

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் சோதனைக்காக நிறுத்தப்பட்ட வாகனங்கள் 

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரளாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் திடீரென சோதனையை அதிகப்படுத்தினர்.

புளியரை சோதனை சாவடியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள்

செங்கோட்டை, புளியரை பகுதிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். தமிழக கேரள வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டன. சுகாதாரத்துறையினர், செங்கோட்டை வருவாய்துறை வட்டாட்சியர் ரோசனாபேகம், காவல் ஆய்வாளர் ஸ்யாம் சுந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் புளியரை சோதனை சாவடியில் தீவிர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2.50 கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இல்லையேல் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று வேண்டும். இவை இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக் கூடியவர்களும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் கேரளாவிற்கு செல்லக்கூடிய அனைத்து நபர்களுக்கும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 19 Aug 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்