/* */

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தப்பி கரைசேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவுரை

வாலாஜாப்பேட்டை அருகே பாலாற்றில் விழுந்த இளைஞரும், காப்பாற்ற முயற்சித்த நபரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

HIGHLIGHTS

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தப்பி கரைசேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவுரை
X
வெள்ளத்தில் சிக்கி தப்பித்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப் பேட்டை அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆற்றங்கரையோரம் யாரும் செல்லவேண்டாம் என பல்வேறு எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து காவல்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ,வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் பாலாற்றங் கரையோரம் நின்று வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பிரகாஷ் திடீரென தவறி விழுந்து அவர் தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனைக் கேட்டதும் அதேப்பகுதியை சேர்ந்த கமலேஷ், என்ற இளைஞர் உடனே ஆற்றில் குதித்து பிரகாஷை காப்பாற்ற முயன்று உள்ளார்.

ஆனால் 2 பேரும் சுமார் 2, கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்நிலையில் ,பிரகாஷ், காமேஷ் வெள்ளத்தில் நீந்தி அதிர்ஷ்டவசமாக திருமலைச்சேரியில் கரையைப் பற்றினர் .

இதற்கிடையே பாலாற்று வெள்ளத்தில் இளைஞர்கள் இருவர் அடித்துச்சென்று உயிருடன் கரைக்கு திரும்பியது குறித்து தகவலறிந்த இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன், அங்கு விரைந்து சென்று பிரகாஷ், காமேஷ் இருவரையும் சந்தித்து எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Updated On: 21 Nov 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...