/* */

தோட்டக்கலை பயிர்களை மழையிலிருந்து பாதுகாக்க யோசனை

வடகிழக்கு பருவ மழையிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத்துறை யோசனை கூறியுள்ளது

HIGHLIGHTS

தோட்டக்கலை பயிர்களை மழையிலிருந்து பாதுகாக்க யோசனை
X

பைல் படம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை செய்து தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேக்கத்தினால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க வடிகால்களை சீரமைப்பு செய்து பயிர்களை பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில்;, நிழல்வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் செய்துள்ள விவசாயிகள் பசுமைக்குடில்; மற்றும் நிழல் வலைக் குடில்களை பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம்.

மேலும் பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்கவும், கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரி செய்யவும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாதவகையில் பாதுகாக வேண்டும்.

மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

மேலும் காற்றினால் பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும். மிளகு செடியில் நோய் வராமல் தடுக்க டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தபடுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு வடகிழக்கு பருவமழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கா வண்ணம் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்திடலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...