கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் குறுக்கே மூங்கில் மரங்கள் விழுந்து கிடக்கும் காட்சி.
Erode News, Erode Today News, Erode Live Updates - கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே மூங்கில் மரங்கள் விழுந்ததால் மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், அணைக்கரை கிராமத்தில் இருந்து கோட்டமாளம் செல்லும் சாலையின் குறுக்கே மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் திங்களூர், சுஜில்கரை, கோட்டமாளம், காடுபசுவன்மாளம், கேர்மாளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மலைக் கிராம மக்கள் மற்றும் கடம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலையில் கிடந்த மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இல்லாததால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu