/* */

பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் தவிப்பு

பள்ளி, கல்லூரி தொடங்கும், முடியும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் தவிப்பு
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பேருநது கிடைக்காமல் தவித்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி தொடங்கும், முடியும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படத் தொடங்கியது. மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லூரி மற்றும் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் மீண்டும் மாலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு முறையான பேருந்து வசதிகள் இல்லாததால், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் காத்திருக்கும் நிலை அவர்களது மகிழ்ச்சியை காணாமல் போகச்செய்துவிட்டது.

மாணவ, மாணவிகள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் ஒரு சில பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனால், இதைத்தக்க வைக்கும் வகையில், மாணவர்கள் முறையாக பேருந்துகளில் செல்வதற்கு அதிக அளவில் பேருந்துகளை இயக்கி நெரிசலில் சிக்காமல், மாணவ, மாணவிகள் பேருந்துகளில் செல்லும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இதன் காரணமாக, மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என பெற்றோர்கள் பொது மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வரும் நாள்களில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு தனியாக பேருந்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 1 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க