/* */

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு
X

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில்  மதநல்லிணக்க  இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார், ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுநர் டாக்டர். ஜெயக்கண் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இஸ்லாத்தின் பெருமைகளை கூறி அனைவரையும் வாழ்த்தி பேசினார்..

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் கவிஞர். தங்கம்மூர்த்தி, டிஇஎல்சி தேவாலயத்தின் கௌரவ சபைகுரு மறைதிரு. பால் ஜேக்கப் ஜெயக்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு நோன்பு இருந்து வரும் இஸ்லாமிய சகோதரர்களை வாழ்த்தி பேசினார்கள். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் ஜி. எஸ்.எம். சிவாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை ஹிக்மத்துல் பாலிகா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ். அப்துல் ஜப்பார் பாகவி இஃப்தார் உரையாற்றி நோன்பு திறப்பு நிகழ்வை நடத்திக்கொடுத்தார். ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் பொறியாளர் பஷீர் முகமது, சிட்டி வாக் அக்பர் அலி, மருத்துவர். அகமது மர்சூக், நிஜாம் லீஃப் பக்ருதீன் அலி, சிங்கப்பூர் எலக்ட்ரிக்கல்ஸ் காஜா மைதீன், தாரகை மென்ஸ்வியர் முகமது தாரிக் ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Updated On: 26 April 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!