/* */

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க எழுச்சிநாள் கருத்தரங்கம்

Government Employees Union Awakening Day Seminar

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க எழுச்சிநாள் கருத்தரங்கம்
X

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற  அரசு ஊழியர் சங்க எழுர்ச்சி நாள் கருத்தரங்கம்

அரசு ஊழியர் சங்க எழுச்சிநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இருபதாம் ஆண்டு எழுச்சிநாள் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் க.குமரேசன், வீ.ஏ.கே.மனோகரன், சு.குணசேரகன், ஜி.என்.பாலமுருகன், அ.கருப்பையா, அ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழமைச் சங்க நிர்வாகிகள் லெ.பிரபாரகன், அ.மணவாளன், ஆர்.சுப்பிரமணியன், மா.குமசேரன், கு.சத்தி உள்ளிட்டோர் வாழத்திப் பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மலர்விழி கருத்துரை வழங்கினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்டு 'பறிக்கப்பட்ட உரிமைகளின் வலியும், விட்டுவிடாத போராட்டங்களின் வலிமையும்' என்ற தலைப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் இரா.ரெங்கசாமி வரவேற்க, ஆ.பழனிச்சாமி நன்றி கூறினார். கருத்தரங்களில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.


Updated On: 2 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’