/* */

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான முதல் காலாண்டு ஆய்வுக் கூட்டம்

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான நடப்பு ஆண்டிற்கான முதல் காலாண்டு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான முதல் காலாண்டு ஆய்வுக் கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைவர் கவிதாராமு தலைமையில்  நடந்த  ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான நடப்பு ஆண்டிற்கான முதல் காலாண்டு ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான நடப்பு ஆண்டிற்கான முதல் காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான 2023-ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் தனியார் திருமண கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், குடியரசு தினம் மற்றும் கிராம சபைக் கூட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஊராட்சி மன்றத் தலைவர்களின் நிறைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர்,திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ஸ்ருதி, உதவித் திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு II) பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்றத்தின் பணி படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.தெரு விளக்குகள் அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுதல், ஊர்ச்சாலைகள் அமைத்தல், சாலை பராமரிப்பு, குடிநீர்க் கிணறு தோண்டுதல்,கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல், சிறிய பாலங்கள் கட்டுதல், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்,கிராம நூலகங்களைப் பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.

கிராம சபைக் கூட்டம்: ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு ஆறு முறை கூடுகின்றன.கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய சுதந்திர நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

கிராம மக்களின் அவைக் கூட்டத்தில், கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையையும் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராமசபைக் கூட்டமே கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்.

கிராம ஊராட்சி: தமிழ்நாட்டில் 500 -க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே:.கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர். உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார்.



Updated On: 24 Jan 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!