/* */

"சைலன்ட் கில்லராக" மக்களை தாக்குகிறது கொரோனா: அமைச்சர் ரகுபதி பேச்சு

கொரோனா வைரஸ் சைலன்ட் கில்லராக இருந்து மக்களை தாக்குகின்றது. 5 நாட்கள் ஆன பிறகே தொற்றின் தாக்கம் தெரிகிறது.

HIGHLIGHTS

சைலன்ட்  கில்லராக  மக்களை தாக்குகிறது கொரோனா:  அமைச்சர் ரகுபதி பேச்சு
X

கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசியபோது எடுத்தபடம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துராஜா, ஆகியோரின் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களிடையே சைலன்ட் கில்லராக இருந்து மக்களை தாக்குகின்றது. தொற்று பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆன பிறகே அவர்களுக்கு அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தெரியவருகிறது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் தொற்று பாதிப்பு இறப்பவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதம் ஆக இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கு அதிகாரிகள் மருத்துவர்கள் முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு கோரிக்கை வைத்தால் உடனடியாக அவர்களுக்கு தயாரிப்பதற்கு அனுமதிகள் வழங்கப்படும்.

திருச்சியில் உள்ள பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டால் உடனடியாக அனுமதி அளிக்க தயாராக இருக்கின்றோம் . எனவே யார் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. தற்போதுள்ள வைரஸ் தொற்று காலகட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் பணிக்கு சேர்வதற்கு தயக்கம் காட்டும் ஒரு சூழ்நிலையில் இருந்து வருகிறது என்று பேசினார்.

#instanews #tamilnadu #Corona #attacks #people #minister #Ragupathi #silentkiller #coronavirus #covid19 #CoronaSpread #stayhome #staysafe #covid

Updated On: 13 May 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  5. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  6. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  7. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  9. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  10. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...