/* */

பெரம்பலூரில் அதிமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல்

பெரம்பலூரில் பொதுமக்களின் கோடை வெயிலின் தாகம் தனிக்கும் விதமாக அதிமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் அதிமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல்
X

ஆண்டு தோறும் கோடையில் நடைபெறும் திருவிழாக்களிலும் நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் இடங்களில் தன்னார்வலர்களாலும் கட்சி சார்ந்தவர்களாலும் தண்ணீர் பந்தல்கள் வைப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் வெளியே வர வாய்ப்புகள் குறைவு என்பதாலும் தண்ணீர் பந்தல் அமைக்கவில்லை. அதே போல் இந்த ஆண்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவினால் கட்சியினர் யாரும் தண்ணீர் பந்தல் அமைக்க வாய்ப்பு இல்லாமல் போனது.


கோடைக்காலம் நெருங்கும் முன்பாகவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் அனல் பறக்க தொடங்கியது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாடும் போதும் வேலை காரணமாக பயணப்படும் போதும் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தாகம் தனிக்க தேனீர் விடுதி, குளிர்பான கடைகளை நாடியுள்ளனர். இதனால் எழை எளிய மற்றும் கூழித் தொழிலாளிகள் அல்லல்பட்டு வந்த நிலையில் பெரம்பலூரில் இன்று அதிமுகவினர் சார்பில் புதிதாக தண்ணீர் பந்தல் அமைத்து பொதுக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலை பெரம்பலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து அவ்வழியாக சென்ற பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நீர் மோர், இளநீர், தர்பூசணியை வழங்கி மகிழ்ந்தார்.

Updated On: 15 April 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...