/* */

ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கத் திட்டம் : கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கத் திட்ட கட்டுமான பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கத்  திட்டம் : கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு
X

ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கம் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்றும் இடத்தை பார்வையிட்டு, விரைவில் முடிக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், கொட்டரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவரது கூரை வீடு தீ பிடித்து முழுமையாக எரிந்து விட்டது. அந்த குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கி, அந்த குடும்பத்திற்கு உடணடியாக வீடு கட்டித் தரும்படி அதிகாரிகளிடம் கூறிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொட்டரை கிராமத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொட்டரை டேம் திட்டமானது மந்தமாக பணிகள் நடைபெற்று வந்தது. ரூ.56.07 கோடியில் 650 ஏக்கர் நிலம் டேம் பணிக்காகவும், 19 கி.மீட்டர் தூரத்திற்கு சுமார் 320 ஏக்கர் முக்கிய வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால் மற்றும் இதர பணிகளுக்காகவும் மொத்தம் 970 ஏக்கர் நிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகாக்கவும், டேம் கட்டுமான பணிகளுக்காகவும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


ரூ.67.05 கோடி மதிப்பீட்டில் டேம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதலாக நிதி தேவைப்படுவதால் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. அந்தபணிகள் நடைபெற்று வரும் இடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். கொட்டரை,ஆதனூர், கூத்தூர், புஜங்கராயந்லூர், நொச்சிக்குளம்,தொண்டப்பாடி, அருணகிரிமங்கலம், அழகிரிபாளையம்,சாத்தனூர், கூடலூர் ஆகிய 10 கிராமங்களில் குடிநீர் தன்னிறைவு பெறவும், 4200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விரைவில் டேம் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்று மருதையாறு கோட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டுக்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், இந்த திட்டத்தை முடிக்க கூடுதல் நிதி தேவைபடுவதை கருத்தில் கொண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து, முதலமைச்சர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து தேவைப்படும் நிதியை பெறுவோம்.

இந்த திட்டத்தை விரைவில் முடித்து இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவும், இங்குள்ள விவசாயிகளுக்கு பாசன வசதி வழங்கவும் நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பேன் என்று கூறினார். ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, மருதையாறு கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, மருதையாறு கோட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் வேல்முருகன், பிரபாகரன் உடன் இருந்தனர்.

Updated On: 20 Jun 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை