/* */

நாமக்கல்லில் உலக காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் உலக காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் உலக காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு  பேரணி
X

காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் கலெக்டர் ஸ்யோசிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்லில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் ஸ்யோசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காசநோய் விழிப்புணர்வு பேனர்களுடன் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தின விழா நடைபெற்றது. உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், காசநோய் மையத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி கலெக்டர் கேடயம் வழங்கினார். 2021-ஆம் ஆண்டிற்கான 20 சதவிகிதம் காசநோய் தொற்று குறைக்கப்பட்ட மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசால் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளதை கலெக்டர் பாராட்டினார்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், காசநோய் துணை இயக்குநர் வாசுதேவன், குடும்பநலத்துறை துணை இயக்குநர் வளர்மதி, தொழுநோய்த் துணை இயக்குநர் ஜெயந்தினி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 24 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?