/* */

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

நாமக்கல் மாவட்டவேலை வாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி
X

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் 5,529 காலியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேர்முகத்தேர்வு கொண்ட பதவி 116 மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத பதவி 5,413 ஆகும். குரூப் 2, குரூப் 2 பிரிவில் முதல் நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பயிற்சி வகுப்பு வருகின்ற 28ம் தேதி திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை, 04286-222260 என்ற போன் மூலமாகவோ அல்லது ஆன்லைன்கிளாஸ்என்கேஎல்அட்ஜிமெயில்.காம் என்ற இமெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ, பதிவு செய்துகொள்ளலாம். இலவச மாதிரி தேர்வு பயிற்சி வகுப்பின் முதல் நாளான 28ம் தேதி, காலை 10 மணிக்கு, 10ஆம் வகுப்பு புதிய சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து தேர்வு நடைபெறும். மேலும் தேர்வர்கள் அரசு வெப்சைட் மூலம் ஆன்லைனிலும், வினாத்தாள்களைப் பெற்று பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!