/* */

நாமக்கல் மாவட்டத்தில் பக்தர்கள் இன்றி தேரோட்டம், தைப்பூச விழா

நாமக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேரோட்டம் இல்லாமலும், பக்தர்கள் இன்றியும் தைப்பூச விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பக்தர்கள் இன்றி தேரோட்டம், தைப்பூச விழா
X

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ முருகன் பவனி வந்தார்.

ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் நடைபெறும், தைப்பூச விழாவின் முக்கியத்துவம் கருதி கடந்த ஆண்டு தைப்பூசம் அன்று அரசு விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது.

இந்த ஆண்டு கொரோன தொற்று வேகமாகப் பரவி வருவதால் தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் தேரோட்டம் நடத்தவும், பக்தர்கள் கூடுவதற்கும் தமிழக அரசு தடை விதித்தது. மேலும் கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு, கோயில் நடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களாக கூலிப்பட்டி முருகன் கோயில், மேகனூர் காந்தமலை பாலசுப்மணியர் கோயில், கபிலர்மலை முருகன் கோயில், காளிப்பட்டி கந்தசாõமி கோயில் ஆகிய கோயில்களிலம் தைப்பூசத் தேரோட்டம் நடத்தவும், பக்தர்கள் தரிசனத்திற்கும் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தடை விதித்துள்ளார்.

இதையொட்டி மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனை நடைபெற்றது. 10.30 மணிக்கு சாமிக்கு மகா தீபாராதணை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறிய மரத்தேரில் (சப்பரம்) உற்சவர் முருகன் எழுந்தருளினார்.

பின்னர் தேர்வீதி வலம் வந்து மதியம் 12 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது. இதேபோல் மற்ற முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா வடைபெற்றது. கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பூஜையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால் முருக பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 18 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்