/* */

நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய பணியாளர் காயம்

நாமக்கல் நகரில் தேரோட்டத்தின் போது, மின்சார கம்பியில் தேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய பணியாளர் காயம்
X

பைல்படம்.

நாமக்கல் நகரில் தேரோட்டத்தின் போது, மின்சார கம்பியில் தேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, இபி காலனியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு வாரமாக தேர்த்திருவிழா நடைபெற்றது. தேரின் முக்கிய நிகழ்வாக இன்று மதியம் தோரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மனை வைத்து, வீதி வழியாக தேரை இழுத்துச்சென்றனர். அப்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது தேர் உரசியதால், தீப்பொறி ஏற்பட்டு தேரின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதனால், தேரை இழுத்து வந்தவர்கள் தேரை அப்படியே நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். அப்போது மின் கம்பியை சரிசெய்ய முயன்ற மின்வாரிய பணியாளர் குமரேசன் என்பவருக்கு காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி, தேரை கோயில் அருகில் நிறுத்தச் செய்தனர். சுவாமி தேரில் மின்கம்பி உரசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 25 April 2022 11:00 AM GMT

Related News