/* */

நாமக்கல்லில் திமுக சார்பில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கம்

நாமக்கல்லில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சார்பில் நீட் தேர்வு ரத்து கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் திமுக சார்பில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கம்
X

நாமக்கல்லில், நீட் தேர்வு விலக்கு கோரி, திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கதில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எம்ஏக்கல் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல்லில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சார்பில் நீட் தேர்வு ரத்து கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மூலம் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, “நீட்விலக்கு நம் இலக்கு என்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம், நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான ராஜேஸ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தரணிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆனந்தகுமார், மாநில அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல், தீர்மானக்குழு துணைத் தலைவர் வக்கீல் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் தீபக்குமார் ஆகியோர் வரவேற்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீட் தேர்வு விலக்கு கோரி கையொப்பமிட்டனர்.

மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் .நலங்கிள்ளி, நகர செயலர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், நாமக்கல் நகராட்சி கலாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாயவன், பொதுக்குழு உறுப்பினர் சுசிதரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Oct 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை