/* */

நாமக்கல் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல்-டிரைவர் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.டிரைவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே அனுமதியின்றி செம்மண்  கடத்திய லாரி பறிமுதல்-டிரைவர் கைது
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

நாமக்கல் அருகே, அரசுஅனுமதியின்றி செம்மண் கடத்திச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அதன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வரகூர் அங்கான்வாடி மையம், வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் கால்நடை மருந்தகம், வரகூர் - மாணிக்க வேலூர் அங்கான்வாடி மையம், மாணிக்க வேலூர், மூலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரகூர் கால்நடை மருந்தகத்தில், தினசரி மருத்துவ பரிசோதனைக்காக வரும் கால்நடைகளின் விவரம், கால்நடைகளுக்கான மருந்துகளின் இருப்பு, நோய்கள் பரவமால் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதனைத்தொடாந்து, வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மூலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வின் போது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை, இடை நிற்றல் ஏதேனும் உள்ளதா அதற்கான காரணங்கள், பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் உள்ளதா, போதிய மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளதா என்பது குறித்து ஆசிரியர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

முன்னதாக, நாமக்கல் - எருமப்பட்டி செல்லும் வழியில், அவ்வழியாக செம்மண் பாரம் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி அதன் ஆவணங்களை கலெக்டர் சோதனை செய்தார். அப்போது, அந்த லாரி அரசு அனுமதியின்றி கெஜக்கோம்பை பகுதியில் செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் ஆர்.ஐ. செல்வமணி எருமப்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வல்லரசு என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்