/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 25ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 25ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 377 மையங்களில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 25ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட 15,15,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,36,841 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9,24,130 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 24 மெகா தடுப்பூசி முகாம்களில் 7,41,221 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். 25ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று 19ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், முனிசிபாலிட்டிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 356 நிலையான முகாம்கள் மூலமாகவும் 21 நடமாடும் குழுக்கள் மூலமாகம் மொத்தம் 377 முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று, இதுவரை ஒரு தவணை தடுப்பூசிகூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து, இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 19 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
  7. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  8. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  9. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்