/* */

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்
X

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை கம்பெனிகள் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் எண்ணை கம்பெனிகள் தவறாமல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தினசரி டீசல் விலை உயர்வால் லாரிகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்யமுடியாமல் சரக்குப்போக்குவரத்து தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல்பங்குகளில்இன்றைய விலை நிலவரம்:

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.89 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.104.84 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 108.40 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  6. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  7. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  8. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  9. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  10. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...