/* */

நாமக்கல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, காணொளி வாயிலாக, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாடு முழுவதும், கொரோனா 2வது அலை தாக்கத்தின்போது, பல ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரசு ஆஸ்பத்திரிகளில் நிமிடத்துக்கு 1,000 லி ஆக்சிஜன் வாயு உற்பத்தி செய்யும் வகையில், பிரத்யேக மையங்களைத் தொடங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் எம்.பி சின்ராஜ், அரசு மருத்துவக் கல்லூரி டீன் அலுவலர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் உள்ள சாதனங்கள் காற்றில் இருந்து நைட்ரஜனை பிரித்தெடுத்து, ஆக்சிஜன் வாயுவை மட்டும் உற்பத்தி செய்யும். அவை குழாய் வழியாக மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும். இது நிமிடத்துக்கு 1,000 லி. ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். ஏற்கெனவே ராசிபுரம், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டில் உள்ளது என்றனர்.

Updated On: 8 Oct 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  5. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  7. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  10. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?