/* */

தூய்மைப்பணியாளர்களுக்கு சொந்த வீடு: தேசிய ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

தூய்மைப்பணியாளர்களுக்கு சொந்த வீடுகட்டித்தர வேண்டும் என்று தேசிய தூய்மைப்பணியாளர் நல ஆணைய தலைவர் வலியுறுத்தினார்.

HIGHLIGHTS

தூய்மைப்பணியாளர்களுக்கு சொந்த வீடு: தேசிய ஆணையத் தலைவர் வலியுறுத்தல்
X

நாமக்கல்லில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங்,போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர்.

தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார். அவர் நாமக்கல் நகராட்சி மற்றும் தும்மங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர்களிடம், நிலுவையின்றி சம்பளம் வழங்கப்படுகிறதா, பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீது வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

தும்மங்குறிச்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் சங்க பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு திட்டங்கள், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள், தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவை குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சொந்த வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் சுயத்தொழில் தொடங்க மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. தூய்மை பணியாளர்களின் மீது தனி கவனம் செலுத்தி, அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ கதிரேசன், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சுல்தானா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 2:00 AM GMT

Related News