/* */

அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

கிராமப்புறங்களில் கொரோனா தொற்றைக் குறைத்திட அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்:   கலெக்டர் வேண்டுகோள்
X

நாமக்கல்லில் நடைபெற்ற, கிராமப்புறங்களில் கொரேனா கட்டுப்பாடு குறித்த, மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசினார்.

கிராமப்புறங்களில் கொரோனா தொற்றைக் குறைத்திட அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மேற்கொள்ளபடும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து, மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், கூடுதல் படுக்கைகளுக்காக தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கோவிட் தொற்று அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி உள்ள நபர்கள் குறித்து விசாரனை மேற்கொள்ளப்படுகிறது. பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டும் மருத்துவ சிகிச்சைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு களப்பணியில் ஏற்படும் பிரச்சினைகளை களைந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மண்டல அலுவலர்கள் செய்திடவேண்டும். கட்டுப்பாடு மண்டலங்களில் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பல்சாக்சி மீட்டர் கொண்டு ஆக்சிஜன் அளவு 94க்கு குறைவாக உள்ள நபர்கள் பட்டியலை உடனுக்குடன் சுகாதாரத் துறைக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் சுகாதாரத்துறை அறிவுரையின்படி வெளியில் சென்றால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் அவர்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்வதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நோய்த்தொற்று முழுமையாக குறையும் வரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி, கட்டுப்பாட்டு பகுதியில் கண்காணித்தல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்தி நோய்த் தொற்றைக் குறைக்க மண்டல அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் (பொ) கிருஷ்ணாமூர்த்தி மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்