/* */

நாமக்கல்லில் 6 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

நாமக்கல்மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் வருகை துவங்கியது. மொத்தம் 3,853 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 6 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி
X

நாமக்கல் தனியார் பள்ளியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், காலை 11.30 மணிக்கு மாணவ மாணவிகள் பரிசோதனைக்கு  பின் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்கு, தேசிய தேர்வு மையம் மூலம் இன்று 12ம் தேதி நீட்தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி, பல்லக்காபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, நாமக்கல் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமி, கீரம்பூர் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய 6 மையங்களில் நீட்தேர்வு நடைபெறுகிறது.

ஹால் டிக்கட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, காலை 11 மணி முதல், மதியம் 1.30 மணி வரை குறிப்பிட்டுள்ள நேரப்படி மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ணவர்களிடம் சோதனை செய்யப்பட்டு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 2 மணி தொடங்கி மாலை 5 மணி வரை, தேர்வு நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் மொத்தம் 3,853 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், கடந்த ஆண்டு 4,839 பேர் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வு மையங்களில் வழக்கம் போல இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூடங்களுக்குள் செல்லும் மாணவ மாணவிகளுக்கு, மாஸ்க்குகள் வழங்கப்படுகிறது. அதையே அவர்கள் பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாணவர்களும் சானிடைசர் எடுத்துச் செல்ல அனுமக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!