/* */

நாமக்கல் காய்கறி மொத்த விற்பனை சந்தையை பழைய இடத்திற்கே மாற்றக்கோரிக்கை

மழையால் சேதமடைந்துள்ள, நாமக்கல் காய்கறி மொத்த வியாபார சந்தையை பழைய இடத்திற்கே மாற்றித்தர வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர், கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் காய்கறி மொத்த விற்பனை சந்தையை பழைய இடத்திற்கே மாற்றக்கோரிக்கை
X

நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்கு தற்காலிகமாக செயல்படும் காய்கறி மொத்த விற்பனை சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் நாமக்கல், திருச்செங்கோடு ரோடு, வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த விற்பனை சந்தை, கடந்த சில வாரங்களாக நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மழை பெய்ததால், களிமண்ணால் ஆன அந்த பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மைதானத்திற்குள் வியாபாரிகள் செல்வதற்கும், வாகனங்கள் போகவரவும் மிகவும் சிரமாக உள்ளது. மேலும் அந்த இடத்தில் வியாபாரிகள் தற்காலிக பந்தல் அமைத்து, அங்கு மீதமாகும் காய்கறிகளை இருப்பு வைப்பதால், மழை நேரங்களில் காய்கறிகள் அதிகளவில் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பல வியாபாரிகள் அங்கு வருவதில்லை.

காய்கறி மொத்த வியாபார சந்தையை மீண்டும் வாரச்சந்தை வளாகத்திற்கே மாற்றித்தரக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார், நகர காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் 30க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள், கலெக்டர் ஸ்ரேயாசிங் மற்றும் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மார்க்கெட் பகுதியை நேரில் ஆய்வுசெய்த பிறகு இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.

Updated On: 8 July 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!