/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில் உண்டியல் திறப்பு

Sri Veera Anjaneyar Temple -நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.45 லட்சம் பெறப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில்  உண்டியல் திறப்பு
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Sri Veera Anjaneyar Temple -நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினசரி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயிலில் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும்.

கடந்த 23.6.022 அன்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று கோயில் செயல் அலுவலர் இளையராஜா மேற்பார்வையில், பக்தர்கள் முன்னிலையில் மீண்டும் உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ. 37லட்சத்து 17 ஆயிரத்து 665, தங்கம் 57 கிராம், வெள்ளி 22 கிராம் கிடைக்கப் பெற்றது.

இதேபோல் அருள்மிகு நாமகிரித்தாய் உடனுறை நரசிம்மசாமி திருக்கோயிலில் 4 உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 315, தங்கம் 58 கிராம், வெள்ளி 141 கிராம் கிடைக்கப் பெற்றது.

இரண்டு கோயில்களிலும் சேர்த்து உண்டியல்களில் இருந்து பக்தர்களின் காணிக்கையாக மொத்தம் ரொக்கம் ரூ.44 லட்சத்து 99 ஆயிரத்து 980, தங்கம் 115 கிராம், வெள்ளி 163 கிராம் கணக்கீடு செய்யப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?