/* */

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம் லத்துவாடி கிராமத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழாவில், போலீஸ் டிஎஸ்பி சுரேஷ் பேசினார். அருகில் கல்லூரி முதல்வர் முருகன்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் திட்ட மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் லத்துவாடி கிராமத்தில் ஒரு வாரம் நடைபெற்றது.

ஒருவார முகாமில் மாணவ மாணவிகள் பல்வேறு சமூக சேவைகளை செய்தனர். முகாம் நிறைவு விழாவில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் நாகராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பங்காரு, இன்னமுது, லத்துவாடி பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: மாணவர்கள் சிறு வயதில் தவறு செய்து, போலீஸ் வழக்குப் பதிவு செய்தால், அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். எனவே மாணவ மாணவிகள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். சிறந்த முறையில் படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று, உயர்ந்த அரசு பணிக்கு சென்றால் உலகம் உங்களை மதிக்கும். இதுவே உங்கள் பெற்றோருக்கும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமையாகும் என்று கூறினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் பழனிசாமி, நாகரத்தினம், உடற்கல்வி இயக்குனர் கார்த்திக், உதவி பேராசிரியர் கந்தசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 25 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?