/* */

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி, கலெக்டரிடம் மனு

நாமக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி,  கலெக்டரிடம் மனு
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்த தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் நலச்சங்கத்தினர்.

பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி தனியார் பஸ் டிரைவர்கள், கண்டர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சங்க தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அமைப்பு சாரா நல சங்கம் செயல்பட்டு வருகிறது. எங்களது சங்கத்தில் மொத்தம் 260 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பவரல் காரணமாக ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் வேலை இழந்து சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தடுமாறுகின்றனர்,

இந்த கொரோனா பரவல் ஊரடங்கால் அனைத்து பஸ்களும் இயங்காமல் நிறுத்தப்பட்டிருந்தனர். எனவே இத்தொழிலை காப்பாற்றிட அனைத்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் நிவாரணத்தொகை அளிக்க வேண்டும்.

முதல்வர் ஆயுள் இன்சூரன்ஸ் திட்டம் போல், டிரைவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் தனி சலுகைகள் அமைத்து டிரைவர், கண்டக்டர் தொழிலில் இருப்பவர்களுக்கு ஆயுள் இன்சூரன்ஸ் திட்டம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து தொழில்களுக்கும் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வாகன டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு இதுவரை தனி நல வாரியம் தமிழக அரசு அமைக்கப்படவில்லை,

எனவே தமிழக அரசு தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அதன் மூலம் பல்வேறு சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 23 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்