/* */

நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் 2 காதல் ஜோடியினர் தஞ்சம்

நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இரண்டு காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் 2 காதல் ஜோடியினர் தஞ்சம்
X

நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த 2 காதல் ஜோடிகள்.

திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் சக்திவேல் (28). இவரும் பிலிக்கல்மேடு பகுதியை சேர்ந்த ஜீவா (21) என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அத்தனூர் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்து தஞ்சம் அடைந்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள எருமப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்குட்டி. இவருடைய மகன் விஜய் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகள் கனிமொழியும் (19) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களின் காதல் பெற்றோருக்கு தெரியவந்தது. சண்முகசுந்தரம் குடும்பத்தினர் மகள் கனிமொழியை வேறு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க முயற்சி செய்தனர். அதனால் காதல் ஜோடியினர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறினர். விஜய்யும், கனிமொழியும் திருப்பூர் சென்று அங்குள்ள கோயில் ஒன்றில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது பெற்றோர்கள் தங்களை துன்புறுத்தாமல் இருக்க, பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஆபீசிற்கு வந்து மனு அளித்துள்ளனர்.

இரண்டு காதல் ஜோடியினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Sep 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?