/* */

குமாரபாளையம் விசைத்தறி அதிபரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

விசைத்தறி உரிமையாளர் மிரட்டுவதாகக் கூறி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

குமாரபாளையம் விசைத்தறி அதிபரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, வெப்படை அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி நாகம்மாள் (41). ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் விசைத்தறி பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.60 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்திற்கான தவணையை, ஓரிரு மாதங்கள் மட்டுமே செலுத்திய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, நாகராஜ் மனைவியை பிரிந்து சென்றுவிட்டார்.

கணவர் இல்லாததால், தனது மகனுடன் விசைத்தறி பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டே நாகம்மாள் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில், விசைத்தறி உரிமையாளர், நாகம்மாளிடம் கடன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நாகம்மாள் மனுவை அளித்துவிட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சுற்றி வந்துள்ளார். மாலை 3:30 மணியளவில், திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் அவரை தடுத்து, நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 7 Sep 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?