/* */

நலம் காப்போம் கொல்லிமலை திட்டம்: நாளை முதலாவது சிறப்பு மருத்துவ முகாம்

பழங்குடியின மக்களுக்கான நலம் காப்போம் கொல்லிமலை திட்டத்தின் கீழ் நாளை முதலாவது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நலம் காப்போம் கொல்லிமலை திட்டம்: நாளை முதலாவது சிறப்பு மருத்துவ முகாம்
X

பைல் படம்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களின் நலன் காப்பதற்காக, கொல்லிமலை பகுதிகளில் 16 இடங்களில் நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முதலாவதாக, நாளை 28ம் தேதி கொல்லிமலையில் உள்ள செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குதல், செயற்கை அவையங்கள் தேவைப்படுபவர்களுக்கு அளவெடுத்தல், மருத்துவ பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த முகாமில் தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளைச4" சேர்ந்த இதயம், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கவுள்ளார்கள். சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்தவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் கொல்லிமலை பகுதி பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அரசுத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் அனைவரும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?