/* */

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் கோர்ட் ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி
X

விபத்து இழப்பீடு வழங்காததால், நாமக்கல் பஸ் நிலையத்தில் கோர்ட் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் கோர்ட் ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் வீரகுமார். இவர் கடந்த 2016 ஜூலை 25-ஆம் தேதி நாமக்கல்-மோகனூர் மெயின் ரோட்டில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். கொண்டிசெட்டிப்பட்டி குன்னி மரத்தான் கோயில் அருகில் சென்ற போது, அவ்வழியாக வந்த, சேலம் கோட்ட அரசு பஸ் வீரக்குமார் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டு இறுதி விசாரணையின்போது, வீரக்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடாக, ரூ.10 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடித்தது. இதனால் அதே கோர்ட்டில் மனுதாரர் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில், அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் பணம் வழங்க முன்வராததால், நீதிமன்ற உத்தரவுப்படி நாமக்கல் பஸ் நிலையத்தில் சேலத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட அரசு பஸ்சை கோர்ட் பணியாளர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு எடுத்துச்சென்றனர். பின்னர் பாதுகாப்பு கருதி அந்த பஸ் போக்குவரத்துக் கழக டெப்போவில் நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 4 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு