கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
X

கோடை கால விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரிக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:

வெப்ப அலையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவதற்காக உடலில் நீா்ச் சத்து குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆா்எஸ் கரைசல், எலுமிச்சை ஜூஸ், தா்பூசணி, இளநீா், மோா் உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக வேண்டும். மேலும், மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்லும் போது காலணிகள், குடையை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் போன்ற இடங்களில் இலவசமாக ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மேலும், வீட்டிலேயே ஒரு லிட்டா் தண்ணீரில் மூன்று கரண்டி சா்க்கரை, ஒரு கரண்டி உப்பு கலந்து ஓஆா்எஸ் கரைசலை தயாரித்து பருகலாம் என்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், துரைபாபு மற்றும் செவிலியா்கள் செய்திருந்தனா்.

கோடைகால கிரிக்கெட் போட்டி

வந்தவாசி ரிபப்ளிக் 11 கிரிக்கெட் அணி சார்பில் சுழல் கோப்பை கோடைகால கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதற்கான தொடக்க விழா வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இவ்விழாவினை வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமை வகித்து கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலை கல்லூரி செயலாளர் ரமணன் கிரிக்கெட் அணி தலைவர்களை கௌரவித்தார். திமுக நகர செயலாளர், நகர மன்ற தலைவர் ஜலால் ,திமுக கட்சி நிர்வாகிகள் ,போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போட்டியில் வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ரூபாய் 50,000 இரண்டாம் இடம் பெரும் மணிக்கு 25 ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசளிப்பு விழா போட்டி நிறைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!