/* */

நாமக்கல் பாஜக சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

நாமக்கல் நகர பாஜக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்கள் அனுப்பப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் பாஜக சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
X

நாமக்கல் போஸ்ட் ஆபீசில் நகர பாஜக சார்பில் தலைவர் சரவணன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை விடுமுறை தின வாழ்த்து என்கிறார். எனவே பாஜகவினர் அவருக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்களை அனுப்ப வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதனைதொடர்ந்து நாமக்கல் தபால் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் சேலம் கோட்ட பொறுப்பாளர் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆயிரம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதம் அனுப்பினர். இதில் நகர துணைத்தலைவர்கள் சிம்பு பரமசிவம், சுரேஷ்கண்ணா, பொருளாளர் வெங்கடேசன், பொதுச்செயலாளர் தினேஷ் சுப்பிரமணியம், பட்டியல் அணி தலைவர் வேலுசாமி மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்