/* */

தூசூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம்; 463 கால்நடைகளுக்கு சிகிச்சை

தூசூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம்; 463 கால்நடைகளுக்கு சிகிச்சை
X

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில், தூசூர் கிராமத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தூசூரில் நடைபெற்ற இலவச கால்நடை மருத்துவ முகாமில், 463 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில், தூசூர் கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜு தலைமை வகித்தார். சிகிச்சைத் துறை தலைவர் தர்மசீலன் வரவேற்றார். சிகிச்சைத் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் கால்நடைகளுக்கு, நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினைப்பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, கன்றுகளுக்கு கொம்பு சுடுதல், மாடுகளுக்கு சுண்டு கால் அறுவை சிகிச்சை, ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம், ஆண் நாய்களுக்கான இனவிருத்தி தடுப்பு அறுவை சிகிச்சை, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் எருமப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மகாமுனி, கொடிக்கால்புதூர் பஞ்சாயத்து தலைவர் சுகுணா, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இதில் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காமில் 62 மாடுகள், 4 எருமைகள், 221 வெள்ளாடுகள், 40 செம்மறியாடுகள், 83 நாட்டுக்கோழிகள், 51 நாய்கள் மற்றும் 2 முயல்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவில் கால்நடை சிகிச்சைத் துறை உதவிப் பேராசிரியர் மனோகரன் நன்றி கூறினார். கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டபலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?