/* */

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு
X

முட்டை விலை - கோப்புப்படம் 

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. பின்னர் சரிவு ஏற்பட்டு, இம்மாதம் 4ம் தேதி, ரூ. 4.75 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த 20ம் தேதி ஒரு முட்டை ரூ. 5.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இன்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 620, பர்வாலா 609, பெங்களூர் 610, டெல்லி 630, ஹைதராபாத் 581, மும்பை 643, மைசூர் 607, விஜயவாடா 591, ஹொஸ்பேட் 570, கொல்கத்தா 655.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 100 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 92 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Updated On: 22 Dec 2023 3:05 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  4. நாமக்கல்
    பிள்ளாநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் ரத்த தான முகாம்
  5. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
  6. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  7. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  8. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை