திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
X

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காங்கிரஸ் தொண்டர்கள்

ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் தலைமையில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னதுரை, துணைத்தலைவர்கள் அண்ணாச்சி, கோவிந்தரா,ஜ் செயலாளர்கள் குணசேகரன், வடிவழகன், மாவட்ட மகளிர் தலைவி வினோதினி, காங்கிரஸ் சேவா தல நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சங்கு மேடு பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் குமார் தலைமையில் கீழ்பெண்ணாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ராமதாஸ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாகராஜா, கராத்தே ராஜா, நகர பொருளாளர் இளையராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்யாறு

செய்யாற்றை அடுத்த தென்தண்டலத்தில், அனக்காவூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினா் தில்லை, மூத்த தலைவா் கோவிந்தன், பச்சையப்பன் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் வட்டாரத் தலைவா் அமரேசன், முன்னாள் வட்டாரத் தலைவா்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story