/* */

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 20 பைசா சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 20 பைசா சரிவு
X

நாமக்கல் முட்டை - கோப்புப்படம் 

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த நவ. 22ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.30-ல் இருந்து 20 பைசா குறைவிக்கப்பட்டு, ரூ. 5.10 ஆனது. கடந்த ஒரு வாரமாக முட்டை மாற்றமில்லாமல் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்øயின் விலை (பைசாவில்) : சென்னை 560, பர்வாலா 541, பெங்களூர் 550, டெல்லி 564, ஹைதராபாத் 525, மும்பை 590, மைசூர் 550, விஜயவாடா 530, ஹொஸ்பேட் 510, கொல்கத்தா 580..

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 77 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 30 Nov 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு