வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 7000 ஆக உயர்ந்துள்ளதாக அனைத்திந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்திய வேளாண்மையின் ஒரு மாற்றம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையை கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண் துறையில் 2014 -15 ஆம் ஆண்டுக்கு முன் 50க்கும் குறைவான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. 2018 19 முதல் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை புதுமை மற்றும் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் வேளாண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது இத்திட்டத்தில் நடப்பு வேளாண் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக ஸ்டார்ட் அப் நிறுவன ஊக்குவிப்பு மற்றும் பராமரிப்.பு துறை வேளாண் வர்த்தக காப்பகங்களையும் நியமித்து உள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் முயற்சிகள் விவசாய காப்பீட்டு திட்டங்கள் விரிவாக்கப்பட்ட நீர்பாசன பாதுகாப்பு இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், பெண் விவசாயிகளை மேம்படுத்துதல் உள்கட்ட அமைப்பு மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சேவைகள் வரை விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 9 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 300 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ரூ. 30 ஆயிரம் கோடியில் இருந்து 1.3 லட்சம் கோடியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க.து
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu