/* */

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: 161 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி: 161 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
X

நாமக்கல் தெற்கு அரசு பள்ளியில், நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் விளக்கி கூறினர்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 161 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் 115 மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

இதன்படி உணவு பொருட்கள், நம்மை சூழ்ந்து இருக்கும் உயிரின உலகம், மனிதர்கள் சிந்தனைகள் மற்றும் இயங்கு பொருட்கள், கருவிகள் இயங்கும் விதம், இயற்கை கோட்பாடுகள், இயற்கை வளங்கள் என பல்வேறு வகையான தலைப்புகளின் கீழ் மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார். ஒவ்வொரு தலைப்பிலும் 3 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தன். நாளை 31ம் தேதியும் இக்கண்காட்சி நடைபெற உள்ளது, முன்னதாக சிஇஓ மகேஸ்வரி வரவேற்றார். டிஇஓக்கள் ராமன், விஜயா, உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 30 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  2. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  4. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  5. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  7. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  8. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  9. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  10. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...