/* */

கொல்லிமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

கொல்லிமலையில் நடைபெற்று வரும் சுரங்க நீர் மின் திட்ட பணிகளை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் சென்று பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுரங்க நீர் மின் திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உமா, நீர்மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வரும் சுரங்க பாதையில் அலுவலர்களுடன் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கொல்லிமலை மாசிலா அருவியை பார்வையிட்டு, நீர் வரத்து குறித்தும், சுற்றுலா பயணிகளின் வருகை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, எடப்புளிநாடு ஊராட்சி, செங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விபரங்கள், மருந்துகளின் இருப்பு, படுக்கை வசதிகள், நோயாளிகளின் வருகை விபரம் பதிவேடு உள்ளிட்ட விபரங்களை டாக்டர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் விபரம், குழந்தைகளின் உயரம், எடை குறித்த விபரம் குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். அரியூர்நாடு ஊராட்சி, சோளக்காடு பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பயனாளியின் வீட்டை அவர் பார்வையிட்டார்.

பின்னர், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அக்கியம்பட்டி ஊராட்சி, கோனானூர் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Jan 2024 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  4. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  7. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  9. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...