/* */

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்கள், அவர்கள் குறித்த முழு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

HIGHLIGHTS

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை  முழுமையாக பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
X

வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவன உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள், ரிக் உரிமையாளர் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தினருக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் பல்வேறு தொழில்களில் முன்னோடி மாவட்டமாக விளங்குகின்றது. அதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வருகை தந்து இங்கு பணிபுரிந்து வருகின்றனர். தொழில் நிறுவனத்தினர், வணிக நிறுவத்தினர், செங்கல் சூளை உரிமையாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள், ரிக் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும், தங்களிடம் பணிபுரியும் வெளி மாநில பணியாளர்களின் விபரங்களை, கட்டாயம் பதிவு செய்து, பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து பணியாளர்களை பணிக்கு அமர்த்தும்போது, அவர்கள் குறித்த புகைப்படம், முகவரி, வயது, குடும்பத்தினரின் விபரங்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 14 வயது நிரம்பியிருந்தாலும், 18 வயதுக்கு குறைவான நபர்களை பணிக்கு அமர்த்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார்.

நாமக்கல் எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, சப் கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 31 July 2022 4:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?