/* */

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா  தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
X

புதுச்சத்திரம் ஒன்றியம் கரடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போடும் முகாம்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக தடுப்பூசி போடுவதை, அவர் பார்வையிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் வருகை தந்துள்ள பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தடுப்பூசியின் முக்கியதுவம் குறித்து எடுத்துரைக்குமாறும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, உடுப்பம் பஞ்õõயத்தில், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்ட சிறுகுட்டைகளை ஆழப்படுத்தும் பணியை அவர் பார்வையிட்டார்.பின்னர், வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கான வசதிகளை பார்வையிட்டு, மருத்துவ வசதிகள், மருந்து பொருட்களின் இருப்பு, நோயாளிகளின் தினசரி வருகை எண்ணிக்கை மற்றும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

ஒவ்வொரு மாதமும் மகப்பேறு மருத்துவ சிகிச்சை எண்ணிக்கை, ஆண், பெண், குழந்தை பிறப்பு பாலின விகிதம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அறிவிப்பு பலகையில் சரியாக எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 July 2021 4:00 AM GMT

Related News