/* */

நாமக்கல்லில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மகளிர் தினம் கொண்டாட்டம்

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள், சர்வதேச மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மகளிர் தினம் கொண்டாட்டம்
X

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் சார்பில், சர்வதேச மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள், சர்வதேச மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பிரிவில் மொத்தம் 29 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் 100 க்கு மேற்பட்ட ஆன் தொழிலாளர்களும், 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் இரவு பகல் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, 108 பெண் தொழிலாளர்கள் சார்பில், மகளிர் தின விழா நடைபெற்றது.

பாலின சமத்துவத்தை நோக்கி பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக, இந்த நாள் அமைந்திருப்பது வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் அவர்கள் கேக் வெட்டி பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் குமரன் மாவட்ட மேலாளர் சின்னமணி, வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ், மனிதவளத்துறை அலுவலர் வெங்கடேஷ் மற்றும் திரளான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...